MMBL Money Master

MMBL MONEY TRANSFER (PVT) LTD

26 ஆண்டுகளுக்குள், MMBL Money Master இலங்கையருக்கு மத்தியில் வழக்கமான நாமமாக பரிணமித்துள்ளது.

1995 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பயணம் விரைவில் தொழிற்துறையில் தனது வாடிக்கையாளர்களுக்கு எங்கிருந்த போதிலும் மேலதிக சேவைகளை அனுபவிக்கக்கூடிய புரட்சியை தோற்றுவித்துள்ளது.

1995

டிசெம்பரில் Mountain Hawk (Pvt) Ltd நிறுவனத்துடன் பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்க இணைந்து கொண்டது
முதலாவது சேவை நிலையம் கொழும்பு 03 இல் ஆரம்பிக்கப்பட்டது

2002

MMBL Money Transfer (Pvt) Ltd MHEL நிறுவனத்தின் பணப் பரிமாற்ற செயல்பாட்டை பெப்ரவரி மாதம் முதல் ஏற்று நடத்த தொடங்கியது.

செப்டம்பரில் 20ஆவது சேவை நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.

365 நாட்களும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய நிலையம் கொழும்பு 03 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2006

அக்டோபரில், Mercantile Merchant Bank Ltd, Aitken Spence PLC உடன் 50:50 கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Aitken Spence PLC, MMBLன் பணப் பரிமாற்ற முகாமைத்துவத்தை தன்வசமாக்கியது.

2007

மே மாதம், 1000 வது நிலையம் எமது வலையமைப்புடன் இணைந்தது. ( இலங்கையின் தென் மாகாணம் பெலியத்தையில் அமந்துள்ள ஒரு கூட்டுறவு கிராமிய வங்கி).

2008

வர்த்தக நாமமானபல்வேறுபட்ட வலையமைப்புக்களுக்கு தனி அடையாளம் கொடுக்கும் வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றுவரை

தற்போது வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு கிராமிய வங்கிகள், அடகு நிலையங்கள், தபால் நிலைய முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளடங்களாக 2000ற்கும் மேற்பட்ட சேவை நிலையங்களுடனும், அதனுடன் இணைந்த அர்ப்பணிப்புள்ள வலைய முகாமையாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வியாபார அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளடங்களாக 20 ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கும், சேவை நிலையங்களுக்குமிடையிலான உறவை வலுப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.