MMBL MONEY TRANSFER (PVT) LTD இலங்கையில் பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனமாகும்
எமது நிறுவனம் MERCANTILE MERCHANT BANK LTD( (MMBL)ன் இரண்டாம் நிலை நிறுவனமான HAWK EXPRESS (PVT) LTD (MHEL)ன் துணை நிறுவனமாக 1995ல் தனது செயல் திட்டத்தை ஆரம்பித்தது.
MMTL நிறுவனம் பணப்பரிமாற்ற செயல்களை MHEL நிறுவனத்திடமிருந்து 2002ல் உரிமை மாற்றம் செய்து கொண்டது. October 2006ல் Aitken Spence PLC நிறுவனம் Mercantile Merchant Bank Ltd (MMBL) உடன் கூட்டு முயற்சியின் மூலம் 50% பங்குகளை நிர்வாக கட்டுப்பாட்டுடன் சேர்த்து பெற்றுக் கொண்டது.
1868 முதல் Aitken Spence PLC தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் பசுபிக் நாடுகளில் செயற்பாடுகளை கொண்ட இலங்கை Blue Chip நிறுவனமாகும். இது 1983 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹோட்டல்கள், போக்குவரத்து, சுற்றுலா, கடல்சார் சேவைகள் ஏற்றுமதி, இறக்குமதி, பெருந்தோட்டம், மின் உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் சொத்து அபிவிருத்தி ஆகிய முக்கிய பங்குகளைக் கொண்டுள்ளது.
மார்ச் 1973ல் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை Mercantile Merchant Bank Ltd (MMBL)ன் 3வது தலைமுறை தொழில் முனைவோர் வரலாற்றில் தனியார் பங்கு, முதலீட்டு வியாபாரம், தரம்/உரிமை நிருவாகம், முதலீட்டு வங்கி, கணக்கியல் சட்டம், பொது நிர்வாகம், நிர்வாக ஆலோசனை, திட்ட விளம்பரம் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளது.
உறுதியான பங்காண்மைத் துணையுடன்,Mercantile Merchant Bank Ltd(MMBL) இன்று பணப் பரிமாற்ற நிறுவனம் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு கிராமிய வங்கிகள், ஏனைய கூட்டுறவு நிறுவனங்கள், அடகு மற்றும் பணப் பரிவர்த்தணை நிலையங்கள், தபால் நிலைய முகவர்கள் மற்றும் மிகப் பிரதானமாக வாடிக்கையாளர் எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ள, நாடளாவிய ரீதியில் பரவலான வலையமைப்பினைக் கொண்டுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளடங்களாக 2000ற்கும் மேற்பட்ட சேவை நிலையங்களைக் கொண்டுள்ளது.